லாரி மோதி முதியவர் சாவு

லாரி மோதி முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
லாரி மோதி முதியவர் சாவு
Published on

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா நத்தகொள்ளை கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 80). இவர், அந்த பகுதியில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த லாரி திடீரென அவர் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் தூசி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com