மினி லாரி மோதி முதியவர் பலி

மினி லாரி மோதி முதியவர் உயிரிழந்தார்.
மினி லாரி மோதி முதியவர் பலி
Published on

விருத்தாசலம், 

விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் ராசலிங்கம் (வயது 63). இவர் குப்பநத்தம் சாலையில் உள்ள தனியார் சிறப்பு பள்ளியில் காவலாளியாக பணிபுரிந்தார்.

வழக்கம்போல் பணி முடிந்ததும், விருத்தாசலம் - கடலூர் சாலையில் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக நெய்வேலியில் இருந்து விருத்தாசலம் நோக்கி சென்ற மினி லாரி ராசலிங்கம் ஓட்டி சென்ற சைக்கிளில் மோதி, கவிழ்ந்தது.

இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து மினி லாரியை பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய டிரைவர் குறித்து விசாரித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com