மொபட் மோதி முதியவர் பலி

ஆயக்குடியில் மொபட் மோதி முதியவர் பலியானார்.
மொபட் மோதி முதியவர் பலி
Published on

பழனியை அடுத்த பழைய ஆயக்குடியை சேர்ந்தவர் ராமசாமி (வயது 85). இவர் நேற்று முன்தினம் சட்டப்பாறை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த முத்துச்சாமி என்பவர் ஓட்டி வந்த மொபட் எதிர்பாராதவிதமாக ராமசாமி மீது மோதியது. இதில் காயமடைந்த அவர் பழனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்ற நிலையில் நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆயக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com