ரெயில் மோதி முதியவர் சாவு

சங்கரன்கோவில் அருகே ரெயில் மோதி முதியவர் இறந்தார்.
ரெயில் மோதி முதியவர் சாவு
Published on

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே உள்ள இலவன்குளம் கிராமத்தை சேர்ந்தவர் குருசாமி (வயது 72). இவர் நேற்று காலை இலவன்குளம் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது, சென்னையில் இருந்து சங்கரன்கோவில் நோக்கி வந்த பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி குருசாமி சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குருசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com