ரெயில் மோதி முதியவர் சாவு

ரெயில்
ரெயில் மோதி முதியவர் சாவு
Published on

ஈரோடு ரெயில் நிலையத்திற்கும், தொட்டிபாளையம் ரெயில் நிலையத்திற்கும் இடைப்பட்ட தண்டவாள பகுதியில் முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் வந்தது. அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணையில் இறந்தவர், ஈரோடு வள்ளியம்மை 1-வது வீதியை சேர்ந்த வரதராஜன் (வயது 68) என்பதும், ரெயில்வே தண்டவாளத்தை கடக்க முற்பட்டபோது, அந்த வழியாக வந்த ரெயில் மோதி இறந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com