மொபட் மீது கார் மோதி முதியவர் பலி

மொபட் மீது கார் மோதியதில் முதியவர் பலியானார்.
மொபட் மீது கார் மோதி முதியவர் பலி
Published on

பெரம்பலூர் அருகே குரும்பலூர் தோப்பு தெருவை சோந்தவர் சிங்காரவேல் (வயது 72). இவர் நேற்று காலை 11.15 மணியளவில் மொபட்டிற்கு பெட்ரோல் போட பாளையம் கிராமத்திற்கு சென்றார். அப்போது துறையூர்-பெரம்பலூர் சாலையில் பாளையம் பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு திரும்பியபோது எதிரே வந்த கார், மொபட் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சிங்காரவேலை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சிங்காரவேல் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனை பிரேத கூடத்தில் வைக்கப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com