விஷம் குடித்து முதியவர் சாவு

சிவகிரி அருகே விஷம் குடித்து முதியவர் இறந்தார்.
விஷம் குடித்து முதியவர் சாவு
Published on

சிவகிரி:

சிவகிரி அருகே ராயகிரி பேரூராட்சி மேல கரிசல்குளம் முப்புடாதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பிச்சையா (வயது 65). இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. இதனால் அவர் அளவுக்கு மீறி மது குடித்ததால் வயிற்று வலி ஏற்பட்டு மிகுந்த சிரமப்பட்டு வந்தார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே பிச்சையா இறந்தார். இதுகுறித்து புளியங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெயலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com