குளத்தில் மூழ்கி முதியவர் சாவு

மார்த்தாண்டம் அருகே குளத்தில் மூழ்கி முதியவர் பரிதாபமாக இறந்தார்.
குளத்தில் மூழ்கி முதியவர் சாவு
Published on

குழித்துறை:

மார்த்தாண்டம் அருகே குளத்தில் மூழ்கி முதியவர் பரிதாபமாக இறந்தார்.

மார்த்தாண்டம் அருகே உள்ள சிராயன்குழி பிலாங்காலையை சேர்ந்தவர் ஆறுமுகம் ஆசாரி (வயது 71). இவருக்கு மனைவியும், 3 மகன்களும் உள்ளனர். அவர்கள் வெளியூரில் வசித்து வருகிறார்கள். இதனால் கடந்த பல ஆண்டுகளாக ஆறுமுகம் ஆசாரி தனது அண்ணன் மகன் வேல்முருகன் (45) என்பவரின் வீட்டில் வசித்து வந்தார்.

இந்தநிலையில் சம்பவத்தன்று மாலையில் ஆறுமுகம் ஆசாரி அருகில் உள்ள குளத்தில் குளிக்க செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் வெகுநேரமாகியும் அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதையடுத்து உறவினர்கள் குளத்துக்கு சென்று பார்த்தபோது அவர் குளத்தில் பிணமாக மிதந்து கிடந்தார். அவர் குளத்தில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. இதுபற்றி தகவல் அறிந்து வந்த மார்த்தாண்டம் போலீசார் ஆறுமுகம் ஆசாரி உடலை மீட்டு பிரேத பாசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com