குளத்தில் மூழ்கி முதியவர் சாவு

குளத்தில் மூழ்கி முதியவர் சாவு
குளத்தில் மூழ்கி முதியவர் சாவு
Published on

கருங்கல்:

கருங்கல் அருகே உள்ள கண்ணன்விளையை சேர்ந்தவர் சேகர் (வயது 62). இவருடைய மனைவி இறந்து விட்டார். நேற்று முன்தினம் அந்த பகுதியில் உள்ள பாறை பொற்றை குளத்தில் சேகர் குளிக்க கரையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக நிலைதடுமாறி குளத்திற்குள் விழுந்தார். இதில் தண்ணீரில் மூழ்கி சேகர் பரிதாபமாக இறந்தார். அந்த வழியாக சென்றவர்கள் சேகர் குளத்திற்குள் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், இதுபற்றி கருங்கல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சேகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com