முதியவர், சிகிச்சை பலனின்றி சாவு

நாகூர் அருகே சாலையோரத்தில் மயங்கி கிடந்த முதியவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
முதியவர், சிகிச்சை பலனின்றி சாவு
Published on

நாகூர்:

நாகூர் அருகே வடக்கு பால்பண்ணைச்சேரி அரசு தொழில் பயிற்சி நிலையம் அருகில் சாலையோரத்தில் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மயங்கி கிடந்தார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து, இதுகுறித்து நாகூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார். சம்பவ இடத்திற்கு சென்று முதியவரை மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அந்த முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவுசெய்து இறந்த முதியவர் யார்?, அவர் எந்த ஊரை சேர்ந்தவர்?என விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com