ஸ்ரீமுஷ்ணம் தெப்பக்குளத்தில் மூழ்கி முதியவர் பலி

ஸ்ரீமுஷ்ணம் தெப்பக்குளத்தில் மூழ்கி முதியவர் பலி

ஸ்ரீமுஷ்ணம் தெப்பக்குளத்தில் மூழ்கி முதியவர் உயிழந்தா.
Published on

ஸ்ரீமுஷ்ணம்

கர்நாடக மாநிலம் உடுப்பியை பூர்விகமாகக் கொண்டு பல்வேறு பகுதிகளில் வசிக்கும் 50-க்கும் மேற்பட்டோர் ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோவில் அருகே உள்ள வியாசராய மடத்தில் தங்கி பாகவதம் பாராயணம் செய்வதற்காக கடந்த 3-ந்தேதி ஸ்ரீமுஷ்ணம் வந்தனர்.

இந்த நிலையில் சென்னை ஆவடி நேரு முதல் குறுக்கு தெருவை சேர்ந்த ஸ்ரீதர்ராவ் மகன் வெங்கடேசன் (வயது 69), தனது மனைவி காந்தி (58), அண்ணன் பாலகிருஷ்ணன், தம்பி ராமச்சந்திரன் ஆகியோருடன் ஸ்ரீமுஷ்ணம் தெப்பக்குளத்தில் குளிக்க சென்றார். அப்போது பாறை வழுக்கியதில் அவர் திடீரென நீரில் மூழ்கினார்.

இதைபார்த்த அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று வெங்கடேசனை மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே வெங்கடேசன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் ஸ்ரீமுஷ்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com