கார் மோதி முதியவர் பலி

மொபட் மீது கார் மோதியதில் முதியவர் பலியானார்.
கார் மோதி முதியவர் பலி
Published on

வவடமதுரை அருகே உள்ள தாமரைப்பாடியை சேர்ந்தவர் முகமது சம்சுதீன் (வயது 68). நேற்று முன்தினம் இரவு இவர், அதே பகுதியில் உள்ள கடைக்கு மொபட்டில் சென்றார். பின்னர் அங்கிருந்து அவர் மொபட்டில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தாமரைப்பாடி பிரிவு அருகே சாலையை கடந்த போது, அந்த வழியாக வந்த கார், இவரது மொபட் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினா மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அங்கமுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com