கார் மோதி முதியவர் பலி

சேத்தியாத்தோப்பு அருகே கார் மோதிய விபத்தில் முதியவர் பரிதாபமாக இறந்தார்.
கார் மோதி முதியவர் பலி
Published on

சேத்தியாத்தோப்பு, 

சேத்தியாத்தோப்பு அருகே எறும்பூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனி (வயது 60). இவர் தனது வீட்டில் இருந்து சைக்கிளில் எறும்பூர் கடைவீதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சைக்காக சிதம்பரத்தில் உள்ள கடலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பழனி பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com