லாரி மோதி முதியவர் பலி

செங்கோட்டை அருகே லாரி மோதி முதியவர் பரிதாபமாக இறந்தார்.
லாரி மோதி முதியவர் பலி
Published on

செங்கோட்டை:

அரியலூரில் இருந்து சிமெண்டு மூட்டைகள் ஏற்றிக்கொண்டு, தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள புளியரை வழியாக கேரள மாநிலம் பள்ளிக்கல் என்ற இடத்துக்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. புளியரை சந்தன மாரியம்மன் கோவில் அருகே நேற்று காலையில் சென்றபோது எதிர்பாராதவிதமாக 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் மீது லாரி மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

தகவல் அறிந்த புளியரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் இடைகால் அருகே உள்ள நயினாகரத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 42) என்பவரை கைது செய்தனர். மேலும் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com