லாரி மோதி முதியவர் பலி

லாரி மோதி முதியவர் பலியானார்.
லாரி மோதி முதியவர் பலி
Published on

அறந்தாங்கி அருகே மேல்மங்கலம் பகுதியை சேர்ந்தவர் யோகாம்பாள் (வயது 60). இவர் நேற்று காலை மேல்மங்கலம் ரைஸ்மில் என்னும் இடத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அறந்தாங்கியிலிருந்து கட்டுமாவடி சென்று கொண்டிருந்த டிப்பர் லாரி யோகாம்பாள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் யோகாம்பாள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து நாகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com