லாரி மோதி முதியவர் பலி

லாரி மோதி முதியவர் பலியானார்.
லாரி மோதி முதியவர் பலி
Published on

ஆலங்குடி அருகே திருவரங்குளம் அழகப்பா நகரை சேர்ந்தவர் முத்து (வயது 65). இவர், சம்பவத்தன்று கடை வீதியில் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஆலங்குடியில் இருந்து புதுக்கோட்டையை நோக்கி சென்ற லாரி அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முத்து பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ஆலங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com