நாகர்கோவிலில்மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி

நாகர்கோவிலில்மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலியானார்.
நாகர்கோவிலில்மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி
Published on

நாகர்கோவில்:

நாகர்கோவில் ராணித்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ராஜன் (வயது 68). சம்பவத்தன்று இவர் ராணித்தோட்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த ஒரு மோட்டார் சைக்கிள் ராஜன் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் அவர் சாலையில் தூக்கிவீசப்பட்டு படுகாயமடைந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்போல் நாகர்கோவில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

---

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com