மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி

மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலியானார்.
மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி
Published on

அறந்தாங்கி அருகே அரசர்குளம் கீழ்பாதி கிராமத்தை சேர்ந்தவர் சின்னத்தம்பி (வயது 60). விவசாயி. நேற்று இவர் தனது மாட்டை கையில் பிடித்துக் கொண்டு சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் சின்னத்தம்பி மீது மோதியது. மேலும் மாட்டுக்கும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நாகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com