மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி

மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பரிதாபமாக பலியானார்.
மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி
Published on

ஆரல்வாய்மொழி மிஷன் காம்பவுண்டு அருகே கிருபை நகரை சேர்ந்தவர் செல்லத்துரை (வயது 78). இவர் சம்பவத்தன்று மாலையில் ஆரல்வாய்மொழி ஜங்சனில் கடைக்கு சென்றார். பின்னர் மீண்டும் வீட்டுக்கு சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கிருபை நகர் அருகே வந்தபோது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட செல்லத்துரை படுகாயமடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி செல்லத்துரை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீசார் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த தெக்கூரை சேர்ந்த சிபு (34) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com