மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி

மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலியானார்.
மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி
Published on

விராலிமலை தாலுகா பூதகுடி கிராமம் ராசநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 70). இவர், நேற்று தனது மோட்டார் சைக்கிளில் மதுரை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் ஏழுமலை ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஏழுமலையை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com