மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி

மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலியானார்.
மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி
Published on

அறந்தாங்கி அருகே உதயமாணிக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பிரான்ஸ் (வயது 80). இவர், நாகுடியில் உள்ள மருந்து கடையில் மருந்து வாங்கிக் கொண்டு கடை வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக அரசர்குளம் கிராமத்தை சேர்ந்த சக்திவேல் மகன் சங்கர் (30) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக பிரான்ஸ் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நாகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கரை கைது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com