திருவள்ளூர் அருகே ரெயில் மோதி முதியவர் பலி - போலீசார் விசாரணை

திருவள்ளூர் அருகே ரெயில் மோதி முதியவர் பலியானார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூர் அருகே ரெயில் மோதி முதியவர் பலி - போலீசார் விசாரணை
Published on

திருவள்ளூர்-ஏகாட்டூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே நேற்று 60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த ரெயில் மோதி அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இறந்தவர் யார்? அவர் எந்த ஊரை சேர்ந்தவர் போன்ற எந்த விவரங்களும் தெரியவில்லை. இறந்த நபர் வெள்ளை பச்சை கோடு போட்ட அரைக்கை சட்டையும், வெள்ளை கருப்பு கட்டம் போட்ட லுங்கியும் அணிந்திருந்தார். இது குறித்து திருவள்ளூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனா. மேலும் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com