பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்:ஓய்வூதியர் சங்கத்தினர் வலியுறுத்தல்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று ஓய்வூதியர் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்:ஓய்வூதியர் சங்கத்தினர் வலியுறுத்தல்
Published on

கோவில்பட்டி:

கோவில்பட்டி பாரதி இல்லத்தில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு வட்டார தலைவர் வெ. முருகன் தலைமை தாங்கினார். துணை தலைவர்கள் மகேஸ்வரன், நம்பிராஜன், பார்த்தசாரதி, பரமானந்தம், செயலாளர் ராமலிங்கம், பொருளாளர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இணை செயலாளர் ஜெயராஜ் வரவேற்று பேசினார். கூட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, மாவட்டத் தலைவர் ஜெகநாதன், நகர இணை செயலாளர் மாரிசாமி மற்றும் நிர்வாகிகள் பேசினர்.

கூட்டத்தில், தமிழக அரசு 70 வயது பூர்த்தி அடைந்த ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,830 வழங்க வேண்டும். மத்திய ரயில்வே துறை மூத்த குடிமக்களுக்கு ரெயில் பயணத்தில் வழங்கிய சலுகைகளை மீண்டும் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இணை செயலாளர் மாரிசாமி நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com