மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை

தூத்துக்குடி அருகே மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
மூதாட்டி விஷம் குடித்து தற்கொலை
Published on

ஸ்பிக்நகர்:

தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் தோப்பு தெருவை சேர்ந்தவர் மாரியம்மாள் (வயது 80). இவர் அவரது மகன் கருப்பசாமியுடன் வசித்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்டாராம். இந்த நிலையில் நேற்று வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். குடும்பத்தினர் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் முத்தையாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com