முல்லைப்பெரியாற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை

முல்லைப்பெரியாற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
முல்லைப்பெரியாற்றில் குதித்து மூதாட்டி தற்கொலை
Published on

தேவாரம் 17-வது வார்டு சந்தை தெருவை சேர்ந்தவர் ராஜூ. இவரது மனைவி வேலம்மாள் (வயது 68). கணவர் இறந்து விட்டதால் வேலம்மாள் தனது உறவினர் வீட்டில் வசித்து வந்தார். இவருக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த வேலம்மாள் நேற்று உத்தமபாளையம் முல்லைப்பெரியாற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த உத்தமபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் போலீசார் வேலம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com