மூதாட்டி கிணற்றில் குதித்து தற்கொலை - போலீசார் விசாரணை

பொன்னேரியில் மூதாட்டி கிணற்றில் குதித்து தற்கொலை செய்துக்கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூதாட்டி கிணற்றில் குதித்து தற்கொலை - போலீசார் விசாரணை
Published on

பொன்னேரி நகராட்சியில் உள்ள என்.ஜி.ஓ நகர், அண்ணா தெருவில் வசித்தவர் தனலட்சுமி (வயது 85). இவரது கணவர் ஏற்கனவே இறந்துவிட்டார். இவருக்கு 3 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். இவர்களுக்கு திருமணம் ஆகிய நிலையில் தனித்தனியே குடும்பத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் மூதாட்டி தனலட்சுமி தனியாக வசித்து வந்தார். நேற்று காலை மூதாட்டி வெகு நேரமாகியும் வீட்டை விட்டு வெளியே வராததால் அக்கம் பக்கத்தினர் மூதாட்டி விட்டுக்கு சென்று பார்த்தனர். அப்போது அவர் வீட்டில் உள்ள கிணற்றில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அக்கம்பக்கத்தினர் மூதாட்டியின் மகன்- மகள்களுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் பென்னேரி போலீசார் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்ததையடுத்து அவர்கள் விரைந்து வந்து மூதாட்டி தனலட்சுமியின் உடலை மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் மூதாட்டி கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com