மூதாட்டி சாவு

ஒரத்தநாடு அருகே மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி இறந்தார்.
மூதாட்டி சாவு
Published on

ஒரத்தநாட்டை அடுத்துள்ள கண்ணுகுடி கிராமத்தை சேர்ந்த சிங்காரம் மனைவி பட்டம்மாள் (வயது75). சம்பவத்தன்று இவர் கண்ணுகுடி மேற்கு காளியம்மன் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே வந்த ஒரு மோட்டார் சைக்கிள் பட்டம்மாள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பட்டமாள் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பாப்பாநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com