கார் மோதி மூதாட்டி சாவு

மணியனூரில் கார் மோதி மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.
கார் மோதி மூதாட்டி சாவு
Published on

கந்தம்பாளையம்

கந்தம்பாளையம் அருகே உள்ள மணியனூர் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் சின்னம்மாள் (வயது 75). இவர் கூலி வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று சின்னம்மாள் மணியனூரில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சேலத்தில் இருந்து மணியனூருக்கு வந்த கார் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சின்னம்மாள் படுகாயம் அடைந்தார். அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது பரிசோதனை செய்த டாக்டர்கள் சின்னம்மாள் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com