ஆயில்பட்டி அருகேவிபத்தில் மூதாட்டி சாவு

ஆயில்பட்டி அருகேவிபத்தில் மூதாட்டி சாவு
Published on

ராசிபுரம்

ராசிபுரம் அடுத்த மெட்டாலாவில் இருந்து முள்ளுக்குறிச்சி செல்லும் வழியில் கல்லாத்துக்காடு என்ற இடத்தில் கடந்த 24-ந் தேதி இரவு 60 வயதுடைய மூதாட்டி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மூதாட்டி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. பலத்த காயம் அடைந்த மூதாட்டியை சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 27-ந் தேதி மூதாட்டி பரிதாபமாக இறந்தார். விபத்தில் இறந்த மூதாட்டியின் உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. இது பற்றி ஆயில்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த மூதாட்டி யார்? எந்த ஊர்? என விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மூதாட்டி மீது மோதிவிட்டு சென்ற வாகனத்தை பற்றியும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com