மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி சாவு

ஆரணி அருகே மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.
மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி சாவு
Published on

ஆரணி

ஆரணி - சேத்துப்பட்டு நெடுஞ்சாலையில் துந்தரீகம்பட்டு ஊராட்சிக்குட்பட்ட சக்தி நகர் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவரின் மனைவி கோவிந்தம்மாள் (வயது 85).

இவர் நேற்று  இரவு வீட்டின் அருகே ரோட்டை கடக்க முயன்றார். அப்போது பதிவு எண் மோட்டார் சைக்கிள் கோவிந்தம்மாள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசில் கோவிந்தம்மாளின் மகன் சீனிவாசன் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தவிடு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com