கார் மோதி மூதாட்டி பலி

கார் மோதி மூதாட்டி பலியானார்.
கார் மோதி மூதாட்டி பலி
Published on

புதுக்கோட்டை சிப்காட் வடமலாப்பூரை சேர்ந்தவர் மருதாயி (வயது 65). இவர் நேற்று  இரவு கருவேப்பிலான் ரெயில்வே கேட் அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த கார் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த மருதாயி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் திருக்கோகர்ணம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் இறந்த மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com