படப்பை அருகே வாகனம் மோதி மூதாட்டி பலி

படப்பை அருகே வாகனம் மோதி மூதாட்டி பலியானார்.
படப்பை அருகே வாகனம் மோதி மூதாட்டி பலி
Published on

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை அடுத்த வஞ்சுவாஞ்சேரி அருகே நேற்று அதிகாலை வண்டலூர்- வாலாஜாபாத் சாலையை 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி கடக்க முயன்றார். அந்த நேரத்தில் அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மூதாட்டி மீது மோதியது. இதில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உடல் நசுங்கி உயிரிழந்தார்.

இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மணிமங்கலம் போலீசார் மற்றும் கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு துறை போலீசார் விசாரணை நடத்தி இறந்த மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப் பதிவு செய்து இறந்த மூதாட்டி யார்? எந்த ஊர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மூதாட்டி மீது மோதி விட்டுச்சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தையும் தேடி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com