ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறிப்பு


ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறிப்பு
x

மூதாட்டியிடம் 5 பவுன் நகையை அபேஸ் செய்த மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகிறார்கள்.

நாகர்கோவில்,

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே உள்ள பொன்னுரிக்கி வீட்டை சேர்ந்தவர் தங்கப்பன். இவருடைய மனைவி லீலாபாய் (வயது 77).இவர் நேற்று முன்தினம் மாலையில் களியக்காவிளை செல்வதற்காக நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் அரசு பஸ்சில் ஏறினார்.

பஸ்சில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தாக கூறப்படுகிறது. பின்னர், களியக்காவிளை வந்ததும் பஸ்சில் இருந்து லீலாபாய் இறங்கினார். அப்போது தனது கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகை மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாரோ மர்ம ஆசாமி நகை அபேஸ் செய்தது தெரியவந்தது.

பின்னர், இதுபற்றி லீலாபாய் களியக்காவிளை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் நகையை அபேஸ் செய்த மர்ம ஆசாமியை தேடி வருகிறார்கள்.

1 More update

Next Story