பரமத்தி அருகேவிபத்தில் மூதாட்டி பலி

பரமத்தி அருகே விபத்தில் மூதாட்டி இறந்தார்.
பரமத்தி அருகேவிபத்தில் மூதாட்டி பலி
Published on

பரமத்திவேலூர்

பரமத்திவேலூர், நல்லியாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கவுஸ். இவரது மனைவி சசிகலா (எ) மும்தாஜ் (வயது 64). இவர் நேற்று காலை பரமத்தி அருகே உள்ள மரவாபாளையம் பஸ் நிறுத்தத்தில் நாமக்கல்லில் இருந்து கரூர் செல்லும் பைபாஸ் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது நாமக்கல்லில் இருந்து கரூர் நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மூதாட்டி மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் மும்தாஜ் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பரமத்திவேலூர் போலீசார் அவரது உடலை மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக சேர்த்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மும்தாஜ் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com