கோபியில் மூதாட்டி தீக்குளித்து தற்கொலை

கோபியில் மூதாட்டி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டா.
கோபியில் மூதாட்டி தீக்குளித்து தற்கொலை
Published on

கடத்தூர்

கோபி டி.ஆர்.ஆர். நகரை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவருடைய மனைவி சிவகாமி (வயது 74). இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு சில நாட்களாகவே அவதிப்பட்டு வந்தார். இதனால் மனமுடைந்த அவர் கடந்த 14-ந் தேதி வீட்டில் இருந்த கடலை எண்ணையை உடலில் ஊற்றி தீவைத்துக்கொண்டார். இதில் உடல் கருகி துடி துடித்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்சில் கொண்டு சென்றார்கள்.

அதன்பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் இரவு சிவகாமி இறந்துவிட்டார்.

இதுகுறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com