மூதாட்டி முகத்தில் மயக்க பொடியை தூவி 15 சவரன் தங்க செயின் பறிப்பு

சென்னையில் மூதாட்டி ஒருவர் வீட்டில் தனியாக இருந்தபோது, மர்ம நபர் ஒருவர் மூதாட்டியின் முகத்தில் மயக்க பொடியை தூவி அவர் அணிந்திருந்த 15 சவரன் தங்கச் செயினை திருடிச் சென்றார்.
மூதாட்டியிடம் தங்க செயின் பறிப்பு
Published on

சென்னை,

சென்னை சைதாப்பேட்டையில் மூதாட்டி முகத்தில் மயக்க பொடியை தூவி 15 சவரன் தங்கச் செயினை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தங்க செயின் பறிப்பு:

சென்னை சைதாப்பேட்டை நாராயணசாமி 1-வது தெருவை சேர்ந்தவர் கமலா (வயது 65). இவர் தனது மகனுடன் வசிக்கிறார். நேற்று முன்தினம் மகன் வேலைக்கு சென்ற நிலையில் மூதாட்டி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது மர்ம நபர் மயக்க பொடியை கமலா முகத்தில் தூவி அவர் அணிந்திருந்த 15 சவரன் தங்கச் செயினை திருடி சென்றதாக தெரிகிறது.

மர்ம நபருக்கு போலீசார் வலைவீச்சு:

அதைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். மூதாட்டியிடம் தங்க செயின் பறிப்பு சம்பவம் தொடர்பாக சைதாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கண்காணிப்பு கேமரா காட்சியை ஆய்வு செய்து நகையுடன் தப்பிச் சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com