நெல்லையில் 4 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி - அரசு மருத்துவமனையில் அனுமதி

நெல்லை அரசு மருத்துவமனையில் 4 பேர் ஒமைக்ரான் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லையில் 4 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி - அரசு மருத்துவமனையில் அனுமதி
Published on

நெல்லை,

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஒமைக்ரான் தொற்று பாதிப்பு எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இன்றைய நிலவரப்படி தமிழகத்தில் இதுவரை ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 121 ஆக உயர்ந்துள்ளது. இதில் 91 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் 4 பேர் ஒமைக்ரான் அறிகுறியுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டான்சானியா நாட்டில் இருந்து நெல்லை திரும்பிய ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து விமான நிலைய ஊழியர், ஒரு பெண் உள்பட 4 பேர் தற்போது ஒமைக்ரான் அறிகுறியுடன் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் 4 பேருக்கும் மருத்துவமனையில் உள்ள ஒமைக்ரான் தனிமைப்படுத்துதல் வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களது மாதிரிகள் மரபணு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், அதன் முடிவுகள் வந்த பின்னர் இது குறித்த விரிவான தகவல் தெரிவிக்கப்படும் என மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com