ஒமைக்ரான் வைரஸ் அச்சுறுத்தல்: மதுரை விமான நிலையத்தில் சிறப்பு குழு அமைப்பு

ஒமைக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மதுரை விமான நிலையத்தில் சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஒமைக்ரான் வைரஸ் அச்சுறுத்தல்: மதுரை விமான நிலையத்தில் சிறப்பு குழு அமைப்பு
Published on

மதுரை,

தமிழகத்திலும் ஒமைக்ரான் வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு நோய் தடுப்பு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. வெளி நாடுகளில் இருந்து வரும் நபர்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

இதன் ஒரு பகுதியாக மதுரை விமான நிலையத்திற்கு வரும் வெளிநாட்டு பயணிகளை பரிசோதனை செய்ய சுகாதார துறை சார்பில் புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் மூலம் வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு ஒமைக்ரான் வைரஸ் பரிசோதனைகள் செய்வதற்கான ஏற்பாடுகளை மதுரை விமான நிலையத்தில் சுகாதாரத்துறை இணை இயக்குனர் (பொறுப்பு) பழனிச்சாமி தலைமையில் திருப்பரங்குன்றம் வட்டார மருத்துவர் சிவகுமார் மற்றும் சுகாதார மேற்பார்வையாளர் தங்கசாமி மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் பணியாளர்கள் உள்ளிட்ட 18 பேர் நியமிக்கப்பட்டு கண்காணித்து வருகின்றனர்.

இவர்கள் விமானம் மூலம் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு ஒமைக்ரான் வைரஸ் பரிசோதனை செய்து, அதன் பின்னர் பயணிகள் அனுப்பி வைக்கப்பட இருக்கின்றனர்.

இதற்கிடையே மதுரை விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு குழுவை, அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று(வியாழக்கிழமை) காலை ஆய்வு செய்து அவர்களுக்கு பல்வேறு வழிகாட்டல்களை வழங்க இருப்பதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com