

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியை சேர்ந்த பள்ளிக்கூட மாணவர்கள் கோகுல் (வயது 17), பிரசன்னா (17) மற்றும் யுவராஜ் (17). நண்பர்களான இவர்கள் 3 பேரும் ஒரே பள்ளியில் படித்து வந்தனர். நடந்து முடிந்த பிளஸ்-2 தேர்வு எழுதி உள்ளனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு இவர்கள் 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் சாத்தூர்-கோவில்பட்டி நான்கு வழிச்சாலையில் உப்பத்தூர் விலக்கு பகுதியில் உள்ள டீக்கடைக்கு சென்று கொண்டிருந்தனர். காட்டுப்பள்ளி வாசல் பகுதியில் சென்ற போது எதிரே கன்னியாகுமரியில் இருந்து ஒரு ஆம்னி பஸ் வந்தது. அந்த பஸ் எதிர்பாராதவிதமாக மோட் டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 3 பேரும், தூக்கி வீசப்பட்டனர்.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த யுவராஜ், பிரசன்னா ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.உயிருக்கு போராடிய கோகுலை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச் சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் கொண்டு செல்லும் வழியிலேயே அவரும் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக ஆம்னி பஸ்சை ஓட்டி வந்த கன்னி யாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியை சேர்ந்த டிரைவர் ஆஸ்டிைன (26), சாத்தூர் தாலுகா போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.