

தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பஸ்சில் இருந்த 6 பயணிகளும் எந்தவித காயமுமின்றி உயிர்தப்பினர்.
கோவையில் இன்று (புதன்கிழமை) காலையில் திருச்செந்தூருக்கு செல்வதற்காக ஆம்னி பஸ் ஓட்டுநர் பாலச்சந்திரன் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றார். ஆம்னி பஸ் தூத்துக்குடி எட்டயாபுரம் சாலையில் சங்கரனேரி சாலையின் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையின் நடுவே இருந்த வேகத்தடையை கடப்பதற்காக ஓட்டுநர் பேருந்தின் வேகத்தை குறைப்பதற்காக பிரேக் பிடித்துள்ளார். இதனால் எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் இருந்த தடுப்புசுவரின் மீது ஏறி பின்னர் சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 6 பயணிகளும் அதிஷ்ட வசமாக எந்தவித காயமும் இன்றி உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து சிப்கார்ட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.