6ம் தேதி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்


6ம் தேதி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
x

கோப்புப்படம்

தினத்தந்தி 1 Nov 2024 10:50 AM IST (Updated: 1 Nov 2024 10:55 AM IST)
t-max-icont-min-icon

வரும் 6ம் தேதி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் 6ம் தேதி மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் நாடு முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில், தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், 6.11.2024 புதன் கிழமை காலை 10 மணிக்கு, மாவட்ட கழக செயலாளர்கள் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த, மாநிலக் கழக செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்ட கழக செயலாளர்கள் மற்றும் பிற மாநிலக் கழக செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். கழக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story