

போடி அருகே உள்ள சிலமலை மணியம்பட்டியைச் சேர்ந்தவர் செல்வக்குமார் (வயது 32). இவர் நேற்று முன்தினம் இரவு போடியில் இருந்து மோட்டார் சைக்கிளில் மணியம்பட்டிக்கு சென்று கொண்டிருந்தார். போடி-தேவாரம் சாலையில் சிலமலை மணியம்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் சென்றது. அப்போது பின்னால் வந்த லாரி எதிர்பாராதவிதமாக இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த அவர் லாரிக்கு அடியில் சிக்கியதால் அவர் மீது லாரி ஏறி இறங்கியது. இதனால் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து போடி தாலுகா போலீசார், லாரி டிரைவரான மதுரை அச்சம்பத்தைச் சேர்ந்த கண்ணன் (43) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.