மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதி முதியவர் பலி

போடியில் மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதியதில் முதியவர் பலியானார்.
மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதி முதியவர் பலி
Published on

போடி புதூர் பகுதியை சேர்ந்தவர் அலாவுதீன் சீனி (வயது 65). இவர், அப்பகுதியில் செங்கல் சூளை நடத்தி வருகிறார். நேற்று காலை இவர், போடி புதூர் பகுதியில் இருந்து மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். குரங்கணி சாலையில் இரட்டை வாய்க்கால் அருகே உள்ள பாலத்தில் வந்தபோது, பின்னால் வந்த டிப்பர் லாரி இவரது மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

இதில் மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே விழுந்த அலாவுதீன் சீனி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்த போடி நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் அலாவுதீன் சீனி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பூப்பாறையைச் சேர்ந்த டிப்பர் லாரி டிரைவரான ஜேசுராஜா என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com