‘கிரெடாய்’ நிறுவனம் சார்பில் புதிய இணையதளங்கள் அறிமுகம் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

புதிய வீடு வாங்க விரும்புபவர்களுக்காக ‘கிரெடாய்’ நிறுவனம் சார்பில் புதிய இணையதளங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
‘கிரெடாய்’ நிறுவனம் சார்பில் புதிய இணையதளங்கள் அறிமுகம் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
Published on

சென்னை,

கிரெடாய் (இந்திய ரியல் எஸ்டேட் சங்க மேம்பாட்டு கூட்டமைப்பு) சென்னை நிறுவனம் சார்பில் புதிய வீடு வாங்க விரும்புபவர்களுக்காக CREDAI365.com என்ற பெயரில் ஒரு இணையதளமும், கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் தொழில்முனைவோர்களை ஒருங்கிணைப்பதற்காக CREDAIBuild Mart365.com என்ற பெயரில் மற்றொரு இணையதளமும் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த 2 இணையதளத்தின் பயன்பாட்டினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் நேற்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கிரெடாய் சென்னை நிறுவனத்தின் தலைவர் டி.பதம் துகார், செயலாளர் எம்.ஆறுமுகம், வியாபார பிரிவு தலைவர் எஸ்.சிவகுருநாதன், மூத்த இயக்குனர் ஆஞ்சோலினா ஆகியோர் கலந்து கொண்டனர்.

கிரெடாய் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள 2 இணையதளங்களின் சிறப்பம்சங்கள் குறித்து அதன் தலைவர் டி.பதம் துகார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இந்தியாவிலேயே முதல்முறையாக வாட்ஸ்-அப் செயலியோடு நேரடியாக தொடர்பு கொள்ளும் வகையில் CREDAI365.com என்ற இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கிரெடாய் நிறுவனத்தில் 200-க்கும் மேற்பட்ட கட்டுமான நிறுவனங்கள் (பில்டர்ஸ்) உறுப்பினர்களாக அங்கம் வகிக்கின்றன. புதிய வீடு வாங்க வேண்டும் என்று எண்ணுபவர்கள் இந்த இணையதளத்தின் மூலம் தங்களுக்கு எந்த அளவில் வீடு வேண்டும், எவ்வளவு மதிப்பீட்டில் வேண்டும் என்பதை கை விரல் நுனியில் தெரிந்து கொள்ளலாம். இடைத்தரகர்கள் தலையீடு இன்றி நேரடியாக தங்களது கனவு இல்லத்தை தேர்வு செய்து வாங்கலாம். குறைந்தபட்சம் ரூ.11 லட்சம் முதல் வீடு விற்பனைக்கு உள்ளது. இந்த இணையதளத்தில் 3 வங்கிகளும் இணைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் வீடு வாங்குவதற்கு எளிதில் கடன் வசதி பெற முடியும்.

தற்போது கிரெடாய் நிறுவனம் சார்பில் 7.5 கோடி சதுரடி அளவில் கட்டுமான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னையில் புதிதாக கட்டப்படும் 100 வீடுகளில் 88 வீடுகள் கிரெடாய் நிறுவனத்தால் மேற்கொள்ளப்படுகிறது.

எனவே சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்கள் உள்பட கட்டுமான தொழிலில் தொடர்புடைய நிறுவனங்களை ஒருங்கிணைப்பதற்காக CREDAIBuild Mart365.com என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் கட்டுமான நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான கட்டுமான பொருட்களை இந்த இணையளத்தில் பதிவு செய்து வாங்குவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் குறைந்த விலையில், தரமான பொருட்களை பெற முடியும். மேலும் கட்டுமான பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் இந்த இணையதளம் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com