தோட்டக்கலைத்துறை சார்பில்மானிய விலையில் மூலிகை செடிகள்:அதிகாரி தகவல்

தோட்டக்கலைத்துறை சார்பில் மானிய விலையில் மூலிகை செடிகள் வழங்கப்படுவதாக அதிகாரி தெரிவித்தார்.
தோட்டக்கலைத்துறை சார்பில்மானிய விலையில் மூலிகை செடிகள்:அதிகாரி தகவல்
Published on

கம்பம் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் பாண்டியரானா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

வீடுகளில் மூலிகை செடிகள் வளர்ப்பதை ஊக்குவிக்கும் விதமாக தோட்டக்கலைத்துறை சார்பில், மருத்துவகுணம் வாய்ந்த துளசி, கற்பூரவள்ளி, திருநீற்றுப்பச்சிலை, பிரண்டை, கீழா நெல்லி, உள்ளிட்ட மூலிகை செடிகள் அடங்கிய "ஹெர்பல் கார்டன் கிட்" பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது. அதனுடன் ஆடாதொடை, கற்றாழை, வல்லாரை, திப்பிலி, அஸ்வகந்தா உள்ளிட்ட செடிகளுடன், 10 செடிகள் வளர்க்கும் பைகள், 10 கிலோ மக்கிய தென்னை நார் கழிவு கட்டிகள், 4 கிலோ மண்புழு உரம் மற்றும் தொழில்நுட்ப கையேடுகள் வழங்கப்படுகிறது. ஒரு தொகுப்பில் விலை ரூ.1,500 ஆகும். தற்பாது இந்த தொகுப்பிற்கு மானியம் வழங்கப்படுகிறது. மூலிகை தொகுப்பு தேவைப்படுவோர் மானியம் போக ரூ.750-யை கம்பம் வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் செலுத்தி பெற்று கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com