

சென்னை,
கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆண்டுதோறும் 500 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டது.
அந்த வகையில் தமிழகம் முழுவதும் அறநிலையத்துறையின் கீழ் உள்ள 20 மண்டலங்களில் 217 ஜோடிகளுக்கு முதற்கட்டமாக இன்று திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இதன்படி சென்னை திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர் கோவிலில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 31 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.