விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தெருமுனை பிரசார கூட்டம்

திருச்செந்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தெருமுனை பிரசார கூட்டம்
Published on

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் பகத்சிங் நிலையம் அருகில் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, கட்சியின் செய்தி தொடர்பு மையம் மாவட்ட அமைப்பாளர் வேம்படி முத்து தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முரசு தமிழப்பன் முன்னிலை வகித்தார்.

திருச்செந்தூர் நகராட்சி டாக்டர் அம்பேத்கர் நினைவு பூங்காவில் டாக்டர் அம்பேத்கர் சிலை அமைக்க அனுமதி வழங்க கோரியும், திருச்செந்தூர் வருவாய் கோட்டத்தை தனி வருவாய் மாவட்டமாக அறிவிக்க கோரியும், தமிழ் மொழியை இந்தியாவின் தேசிய மொழியாக அறிவிக்க கோரியும், ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை அனைத்து ஜாதி மற்றும் மதத்தினருக்கும் இலவசமாக கல்வி வழங்க கோரியும் இந்த கூட்டம் நடந்தது.

கூட்டத்தில், மாவட்ட பொருளாளர் பாரிவள்ளல், ஆழ்வை கிழக்கு ஒன்றிய செயலாளர் சங்கர், சமூக நல்லிணக்க பேரவை மாவட்ட அமைப்பாளர் தமிழ் பரிதி, மீனவர் அணி மாவட்ட அமைப்பாளர் டிலைட்டா, மகளிர் விடுதலை இயக்கம் மாவட்ட துணை செயலாளர் தமிழ்ச்செல்வி, இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை மாவட்ட துணை அமைப்பாளர் நயினார்வளவன், விடுதலைக் கலை இலக்கிய பேரவை மாவட்ட அமைப்பாளர் சிறுத்தை சிவா, நகர செயலாளர்கள் தவ்பிக் அன்சாரி, அல் அமீன், மாணிக்கம், உடன்குடி ஒன்றிய பொருளாளர் டேவிட் ஜான் வளவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com