விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஆதரவற்றவர்களுக்கு மதிய உணவு

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஆதரவற்றவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஆதரவற்றவர்களுக்கு மதிய உணவு
Published on

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு நடிகர் விஜய்யின் ஆணைக்கிணங்க, விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வழிகாட்டுதலின்படி, பெரம்பலூர் மாவட்ட விஜய் மக்கள் இயக்க தலைமையின் சார்பாக ஆதரவற்றவர்களுக்கு மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு விஜய் மக்கள் இயக்கத்தின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் சிவக்குமார் தலைமை தாங்கினார். இயக்கத்தின் சார்பில் பெரம்பலூர் மதனகோபாலசுவாமி கோவில், அரசு மருத்துவமனை, மேற்கு வானொலி திடல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆதரவற்றவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. இதில் இயக்கத்தின் மாவட்ட செயலாளர் சசிகுமார், இணைச் செயலாளர் இளையராஜா, ஆலோசகர் ஈஸ்வரன், நிர்வாகி பிரசாந்த், பெரம்பலூர் ஒன்றிய தலைவர் வினோத் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதே போல் பெரம்பலூர் நகரம், பெரம்பலூர், வேப்பந்தட்டை, வேப்பூர், ஆலத்தூர் (கிழக்கு, மேற்கு) ஆகிய ஒன்றிய பகுதிகளிலும், குரும்பலூர், பூலாம்பாடி பேரூராட்சி பகுதிகளிலும் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் ஆதரவற்றவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. உலக பட்டினி தினத்தை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் சுமார் 1,000 ஆதரவற்றவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com