ஜெயலலிதாவின் பிறந்தநாளில், அவரது நினைவுகளைப் போற்றுவோம்: எல்.முருகன்

ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
ஜெயலலிதாவின் பிறந்தநாளில், அவரது நினைவுகளைப் போற்றுவோம்: எல்.முருகன்
Published on

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, மத்திய இணை மந்திரி எல்.முருகன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

தமிழகத்தின் முன்னாள் முதல்வர், மதிப்பிற்குரிய ஜெ.ஜெயலலிதா அம்மா அவர்களின் பிறந்தநாள் இன்று. திரையுலகில் தனது பயணத்தைத் தொடங்கி, தமிழக வளர்ச்சிக்கும் சமூக நலத்திட்டங்களுக்கும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு சரித்திரம் படைத்த அம்மா அவர்கள், எளிய மக்களின் முன்னேற்றம், பெண்கள் நலன், கல்வி மற்றும் சமூக நீதி ஆகிய துறைகளில் பல்வேறு சாதனைகள் புரிந்த டாக்டர்.செல்வி.ஜெயலலிதா அம்மா அவர்களின் பிறந்த தினத்தில் அவரது நினைவுகளைப் போற்றுவோம்!”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com