சுருளிப்பட்டி ஊராட்சி மீதான முறைகேடு புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை

சுருளிப்பட்டி ஊராட்சி மீதான முறைகேடு புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என வார்டு உறுப்பினர்கள் குற்றம்சாட்டினர்
சுருளிப்பட்டி ஊராட்சி மீதான முறைகேடு புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை
Published on

கம்பம் அருகே சுருளிப்பட்டி ஊராட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக பல்வேறு புகார் மனுக்களை இந்த ஊராட்சியின் வார்டு உறுப்பினர்கள் கடந்த மாதம் 27-ந்தேதி கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்தனர். அந்த மனுவின் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க மாவட்ட வருவாய் அலுவலருக்கு கலெக்டர் முரளிதரன் உத்தரவிட்டார்.

இந்நிலையில், சுருளிப்பட்டி ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் சிலர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். கலெக்டர் முரளிதரனிடம் அவர்கள் ஒரு மனுவை கொடுத்தனர். அந்த மனுவில், "சுருளிப்பட்டி ஊராட்சி நிர்வாகம் மீது கடந்த மாதம் 27-ந்தேதி 3 புகார்கள் கொடுத்தோம். 21 நாட்கள் ஆகியும் அந்த புகார்கள் மீது எந்த விசாரணையும், எந்த நடவடிக்கையும் எடுத்ததுபோல் தெரியவில்லை. ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இரவு, பகலாக கணக்குகளை திருத்தும் பணிகள் நடப்பதாக அறிகிறோம். எனவே, புகார் மனுவின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com